தேவர் சிலை உடைப்பு: ராமநாதபுரத்தில் பெரும் பதற்றம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டு, அதன் மீது சாணியும் பூசப்பட்டிருந்ததால் அங்கு பெரும் பதற்றமும்பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. கல்வீச்சும் கலாட்டாவும் நடந்ததால் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
நேற்று இரவு தேவர் சிலையை யாரோ உடைத்துள்ளனர். மேலும் அதன் மீது சாணியையும் பூசியிருந்தனர். இன்றுகாலை இந்த விவரம் வெளியே பரவத் தொடங்கியதும் நகர் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முக்குலத்தோர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்கள், கார்கள் மீதுகற்கள் வீசப்பட்டன.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கடைகள் அனைத்தும்அடைக்கப்பட்டன.
தொடர்ந்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான போலீசார் அங்குகுவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாதிக் கலவரத்துக்குப் பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் தேவர் பிறந்தநாளின்போது பசும்பொன் அருகே அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. தலித் காலனி வழியாகச்சென்ற சிலர் அவர்களது ஜாதியைச் சொல்லி கேலி செய்துவிட்டு சிலையை உடத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதற்குபதிலடியாகவே தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications