இட்லியில் மயக்க மருந்து கலந்து நகைகளை கொள்ளையடித்த 2 "பலே" பெண்கள்
சென்னை:
ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த இட்லியைக் கொடுத்து சாப்பிடச் செய்து, பின்னர் அவரிடமிருந்து 5 பவுன்நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்களை சென்னை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை-பல்லாவரம் அருகே உள்ள பம்மல்லைச் சேர்ந்தவர் அல்லி. இவர் இன்று காலை ஒரு வேலையாகசென்னை பல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்த இரண்டு பெண்கள், அந்தப் பெண்ணுக்கு சாப்பிடுவதற்காகஇட்லியும் கொடுத்தனர்.
இட்லியில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாத அல்லி, அந்தப் பெண்கள் காட்டிய "அன்பில்" நெகிழ்ந்து போய்மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டார். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அல்லி மயக்கமானார்.
இதையடுத்து அல்லியின் உறவினர்கள் என்று கூறிக் கொண்ட அந்தப் பெண்கள் அவரையும் ஒரு ஆட்டோவில்ஏற்றிக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
பின்னர் அல்லி அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகளை உருவிக் கொண்ட அந்தப் பெண்கள், அல்லியின் பர்சில்வைத்திருந்த ரூ.750 பணத்தையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மயங்கிய நிலையிலேயே இருந்தஅல்லியை உயர் நீதிமன்ற சுவருக்கு அருகில் இறக்கி விட்டுத் தப்பி விட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்தப் பக்கமாக வந்த சட்டக் கல்லூரி போலீசார் மயங்கிக் கிடந்த அல்லியை மீட்டு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் இவ்வளவு விவரங்களும் தெரிய வந்தன. தன்னை அந்த இரண்டுபெண்களும் ஏமாற்றிக் கொள்ளையடித்ததைப் போலீசாரிடம் கூறினார் அல்லி.
இதையடுத்து தப்பியோடிய இரண்டு பெண் கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பறிமுதல்:
இதற்கிடையே சென்னையில் 10,000 பாக்கெட் கள்ளச் சாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் போலீசார் இன்று காலைஅதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துஅவற்றைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications