திண்டுக்கல்: பண்ணை வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒரு பண்ணை வீட்டில் வயதான ஒரு பெண்ணையும் வாயிற்காவலர்களையும் தாக்கிய 4முகமூடிக் கொள்ளையர்கள் அங்கு திருடுவதற்கு ஏதும் இல்லாததால் ஏமாந்து போய் தப்பியோடி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். புதுக்கோட்டை கிராமத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணைவீட்டை சில காவலர்கள் காவல் காத்து வந்தனர்.
நேற்று இரவு காவலர்களும், ஒரு வயதான பெண்ணும் இந்த வீட்டின் வாசல் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் வந்து, அங்கிருந்த காவலர்களை மரத்தடியால்பயங்கரமாகத் தாக்கினர். இதில் அனைத்துக் காவலர்களுமே படுகாயமடைந்து மயங்கிச் சாய்ந்தனர்.
பின்னர் அந்த வயதான பெண்ணிடமிருந்த சில நகைகளைப் பறித்துக் கொண்ட கொள்ளையர்கள் பண்ணைவீட்டின் சாவியைக் கொடுக்கும் படி மிரட்டினர். சாவியைக் கொடுக்க அவர் மறுக்கவே, கொள்ளையர்கள் அந்தவீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
ஆனால் உள்ளே சென்ற கொள்ளையர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கொள்ளையடிப்பதற்கென்று எந்தப்பொருளும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாந்து போன முகமூடிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கொள்ளையர்கள்தாக்குதலால் காயமடைந்த காவலர்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து தப்பியோடிய முகமூடிக்கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications