நார்வே மாநாடு முழுத் தோல்வி: சுப்பிரமணியம் சுவாமி
சென்னை:
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த இலங்கை மறுசீரமைப்புக்கான நிதியுதவி செய்யும் மாநாடு பெரும் தோல்விஅடைந்துவிட்டதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச மாநாடு என்று சொல்லிக் கொண்டு நார்வேயில் கூட்டம் போட்டார்கள். இதில் 40 நாடுகளும் பங்கேற்றன. ஆனால்,இதில் இலங்கைக்கு வெறும் 60 மில்லியன் டாலர்கள் தான் உதவித் தொகை தர அந்த நாடுகள் முன் வந்தன. இதனால் அந்தக்கூட்டமே பெரும் தோல்வி கண்டுவிட்டது.
மேலும், அந்தக் கூட்டத்தில் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் முயற்சி நடந்தது. அதுவும்தோல்வியடைந்துவிட்டது.
இந்திய அரசும் புத்திசாலித்தனமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. விடுதலைப் புலிகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில்வெளியுறவுத்துறை அதிகாரி யாரையாவது பங்கேற்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருந்தால் அவர் மீதுபொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சரணடைந்துவிட்டார். இதனால்இந்தியாவுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இலங்கையின் இனப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி அந்த நாட்டை இந்தியாவுடன் இணைத்துவிடுவது தான்.
இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நார்வேயில் இந்த மாநாடு நடந்த தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், இந்த மாநாட்டில் இந்தியப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
அடுத்ததாக டோக்கியோவில் நடக்கவுள்ள நிதியுதவி செய்யும் நாடுகள் மாநாட்டில் மேலும் பல நாடுகள் கலந்து கொள்ளஉள்ளன. அப்போது இலங்கையின் வட கிழக்குப் பகுதி சீரமைப்புக்கு கூடுதல் நிதி குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications