மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் ரகளை: மேயர் வெளியேறினார்
மதுரை:
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களைஅடக்க வெளியே நின்று கொண்டிருந்த போலீசாரை அழைத்தபோது அவர்கள் வராததால் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு மேயர் செ. ராமச்சந்திரன் வெளியேறினார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு ராமச்சந்திரன் அளித்திருந்த பேட்டியில், மதுரை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்குவதில்தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்குஅதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று கூடிய மாநிகராட்சிக் கூட்டத்தின்போது, மேயர் தனது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறினர்.
மேலும் மேயர் இருக்கை முன்பு நின்று கொண்டு அவரைப் பேச விடாமலும் அதிமுக கவுன்சிலர்கள் தடுத்தனர்.
அதிமுக கவுன்சிலர்களின் இந்த செயலை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கடுமையாகக்கண்டித்தனர்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த மேயர், அதிமுக கவுன்சிலர்களை வெளியேற்றுமாறு போலீஸாருக்குஉத்தரவிட்டார். ஆனால் வாசலில் நின்று கொண்டிருந்த போலீஸார் உள்ளே வர மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து சபையில் கொண்டு வரப்பட்ட சில தீர்மானங்கள் நிறைவேறியதாக அறிவித்து விட்டு மேயர்ராமச்சந்திரன் மடமடவென்று சபையை விட்டு வெளியேறினார்.
ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதிமுக கவுன்சிலர்களைக் கண்டித்து சபைக்கு வெளியே கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து சபைக்கு வெளியிலும் பரபரப்பும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. மொத்தத்தில் இந்தச் சம்பவங்களால்மதுரை மாநகராட்சியில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.
-->
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications