காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் ரத்து: வாஜ்பாய் நடவடிக்கை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கவிருந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்,ஜெயலலிதா பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த முறை பிரதமர் நடத்திய ஆணையக் கூட்டத்தில் இருந்து ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார் என்பதுநினைவுகூறத்தக்கது. இதன் பின்னர் தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் தலைமையில் டெல்லியில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெற இருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்றே டெல்லி செல்வார் என்று கூறப்பட்டது. பின்னர்இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவருடையடெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அவருக்குப் பதிலாக நிதியமைச்சர் பொன்னையன் அனுப்பப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அதே போல கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனியும் தவிர்க்க முடியாத காரணத்தால் இக் கூட்டத்தில் பங்கேற்கமுடியாது என்று அறிவித்துவிட்டார். அவருக்குப் பதிலாக கேரள பாசனத்துறை அமைச்சர் ஜேக்கப் டெல்லிசென்றார்.
அதே நேரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நேற்று மாலையே டெல்லிக்குச் சென்று விட்டார். பாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமியும் இன்று காலை டெல்லி சென்றார்.
ஆனால், காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்கவேண்டும். ஜெயலலிதாவும், ஆண்டனியும் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துவிட்டதையடுத்து மத்தியநீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு வாஜ்பாய் உத்தரவிட்டார். இதையடுத்து இந்தத் தகவலை கிருஷ்ணாமற்றும் ரங்கசாமியிடம் சேத்தியே தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
ஆணையக் கூட்டம் அடுத்த மாதத் துவக்கத்தில் மீண்டும் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications