கொளத்தூர் மணியை கைது செய்ய தமிழகம் தீவிரம்
சென்னை:
கர்நாடக நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட கொளத்துர் மணி, வீரப்பனை சந்திக்கச் செல்லும் போது தமிழக காட்டுப்பகுதிக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வீரப்பனை சந்தித்துவிட்டுத் திரும்பும்போது தமிழகத்தில் நுழைந்தாலும் கைது செய்யுமாறு தமிழக அதிரடிப்படைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொளத்தூர் மணியின் இன்னொரு ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. கொள்ளேகால் நீதிமன்றத்தில்நடக்கவுள்ள இன்றைய விசாரணையிலும் ஜாமீன் கிடைத்தால் தான் மணியால் சிறையில் இருந்து வெளியே வர முடியும்.
கர்நாடகத்தில் அவர் மீது 5 வழக்குகள் உள்ளன. 3 வழக்குகளில் அவருக்கு நேற்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியது. இன்னொரு வழக்கில் முன்பே மைசூர் நீதிமன்றத்தில் ஒரு ஜாமீன் கிடைத்துவிட்டது. 5வது வழக்கில் இன்று ஜாமீன்வழங்கப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
மணி மீது தமிழகத்திலும் 5 வழக்குகள் உள்ளன. இதில் ராஜ்குமார் கடத்தலும் அடக்கம். வீரப்பனுடன் பேச்சு நடத்துவதைதீவிரமாக எதிர்த்து வரும் ஜெயலலிதா, தமிழக எல்லையில் கொளத்தூர் மணி நுழைந்தால் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அவர் காட்டுக்குள் தூது செல்லும்போது கர்நாடக காட்டுப் பகுதிக்குள்ளேயே சென்றாக வேண்டும். வீரப்பனும்அவரைச் சந்திக்க கர்நாடக காட்டுப் பகுதிக்கு வர வேண்டும்.
மணியை தமிழக அதிரடிப்படையின் கண்ணில் படாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடக அதிரடிப்படையிடம்தரப்படும்.
எனவே, இந்த முறை கொளத்தூர் மணியின் தூது முயற்சிகள் பெரும் பரபரப்பு அடங்கியதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
பெங்களூரில் தமிழக போலீஸ்:
இதற்கிடையே தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் பெங்களூரில் ரகசிய கேம்ப் அடித்திருப்பதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
கொளத்தூர் மணியைக் கைது செய்ய தமிழகத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரை எங்கு பார்த்தாலும் கைது செய்யதமிழக போலீசுக்கு அதிகாரம் உண்டு.
எனவே, இன்று கொள்ளேகால் நீதிமன்றத்தால் மணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவரை கர்நாடகத்தில் வைத்தே கைது செய்யதமிழக போலீசார் முயலலாம் என்று தெரிகிறது.
கொள்ளேகால் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் பெங்களூர் அழைத்து வரப்பட்டு உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தூது செல்வது குறித்து ஆலோசிக்கக் கூடும். இவ்வாறு இன்றோநாளையோ மணி பெங்களூர் அழைத்து வரப்பட்டால் அவரைக் தமிழக போலீசார் கைது செய்ய முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், மணியைக் கைது செய்ய க்யூ பிராஞ்ச் போலீசார் பெங்களூர் செல்லவில்லை என்றும் இந்த வழக்கு நிலவரத்தைநேரடியாகக் கண்காணிக்க சில ரகசிய போலீசார் கர்நாடகம் சென்றிருப்பது மட்டுமே உண்மை எனவும் அதைத் தான் கர்நாடகம்பெரிதுபடுத்த முயல்வதாகவும் தமிழக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications