ஆசியா- ஐரோப்பா இடையே புதிய விமானப் பாதை
டெல்லி:
இன்று காலை 7.30 மணி முதல் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான விமானப் பாதைகளில் பெரிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது..
நாடுகளின் மீது விமானங்கள் பறக்கும்போது அவற்றின் ராணுவப் பகுதிகள் மீது பறக்க பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன.ராணுவக் கட்டுப்பாடு உள்ள பகுதிகளின் மீது விமானங்கள் பறக்க முடியாது. இந்த எல்லைகளைச் சுற்றிக் கொண்டு தான்விமானங்கள் பறந்தாக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதனால் பல நாடுகளின் மீது விமானங்கள் பறக்கும்போது ராணுவப் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக வீணாக சுற்றிச் செல்லவேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு நடத்தியது. கிட்டதட்ட 21நாடுகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த நாடுகளின் அரசுகள் தவிர ராணுவங்கள், விமானப் படைகள், விமானநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து தங்கள் நாட்டின் மீது பறக்க இருந்த கட்டுப்பாடுகளை இந்த நாடுகள் நீக்கின. இதனால்ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பறக்கும் விமானங்கள் நேர் கோட்டில் பறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சராசரியாக பயணத்தில் 30 நிமிடங்கள் மிச்சமாகும். இதன் மூலம் ஆண்டுதோறும் விமான நிறுவனங்கள் 55 மில்லியன்டாலர் அளவுக்கு எரிபொருளையும் சேமிக்க முடியும்.
இந்த புதிய விமானப் பாதைகளின் செயல்பாடு இன்று காலை 7.30 மணி முதல் அமலில் வந்தது. இதனால் ஆஸ்திரேலியா,ஆசியா, மேற்காசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய பாதையில் விமானங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.
சிங்கப்பூர், கோலாலம்பூர், பேங்காக் ஆகிய இடங்களில் இருந்து ஐரோப்பா செல்லும் விமானங்கள் இதில் பெரும் பயனடையஉள்ளன.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications