ஏரியில் புதைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை பகுதியில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த 13 பயங்கர பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
ஊத்தங்கரை காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந் நிலையில்தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஏரியில் நடந்த சோதனையின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த 13 பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பயங்கர சக்தி வாய்ந்தவை.
இரும்புக் குழாய், பேட்டரி, வயர்கள், ஆணிகள், ஸ்குரூக்கள், வெடிமருந்து, பசை இதை வைத்து இந்த பைப் குண்டுகளைத்தயாரித்துவிட முடியும். கடிகாரத்துடன் சேர்த்து டைம் பாம் ஆகவும் இதை மாற்றிவிட முடியும்.
காட்டுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த குண்டுகள் அனைத்தும் சாமனப்பள்ளி மலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. சென்னையிலிருந்து வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தண்ணீர் தொட்டிகளில் மூழ்க வைக்கப்பட்டு இந்த குண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குண்டுகள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வெடிகுண்டு நிபுணர்கள்கருதுகின்றனர்.
இதனால் இங்கு நக்சல்கள் செயல்பாடு பல ஆண்டுகளாகமாக இருந்து வந்துள்ளது உறுதியாகிறது.
தனிப் பிரிவு அமைப்பு:
தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தியுள்ளது.
இத் தகவலை உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications