மாஜி திமுக அமைச்சருக்கு ரூ. 12 கோடி சொத்து
திருச்சி:
தனக்கு ரூ. 12 கோடிக்கு சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தவறான தகவல் தந்துள்ளதாக மாஜி திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அன்பழகன், ஐ.பெரியசாமி ஆகியோரோடு சேர்த்து நேருவின் வீடுகளிலும் அதிரடி நடந்தது. இதில் அதிக அளவுக்கு சொத்துகுவித்திருப்பது நேரு தான் என்று தெரிகிறது.
திருச்சி, சென்னை, திருப்பூர், நாமக்கல் என இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகள், பங்களாக்கள்,பண்ணைகள் உள்ளன. நேருவின் வீடுகளிலும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் நடக்கப்பட்ட ரெய்டுகளில்இவருக்கு ரூ. 12.35 கோடியளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது.
ஆனால், நேரு மறுக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் அப்பா காலத்தில் இருந்தே நாங்கள்மிளகாய் வியாபாரம், பெட்ரோல் பங்க்கள், போர்வெல்கள், பால் பண்ணைகள் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளோம்.
எனது சகோதர்களுக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. வாடகை வீட்டில் தான் உள்ளனர். அவர்களது அலுவலகங்களும்வாடகைக் கட்டிடங்கள் தான்.
உத்தண்டியில் உள்ள சொத்துக்கள் எனது சகோதரருடயைவை. என்னுடையவை அல்ல. அங்குள்ள வீடு கூட எல்.ஐ.சியில் லோன்எடுத்துத் தான் கட்டப்பட்டது.
நான் அமைச்சராவதற்கு முன்பே எனது குழந்தைகள் படித்து முடித்துவிட்டனர். அவர்கள் ஏற்றுமதித் தொழிலும் ஈடுபட்டுள்ளனர்.இது தவிர எனது பரம்பரை சொத்தாக 60 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க எனக்கு 12.35 கோடி சொத்து இருப்பதாகவும் நான் ஊழல் செய்து பணத்தை சேர்த்தாகவும் கூறுவதுசுத்த அபத்தமானது.
இந்த அரசு தனது தோல்விகளையும், மக்கள் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. அதிலிருந்து மக்களின்கவனத்தை திசை திருப்பவே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நேரு தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருமுறை உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் தீவிரமான ஆதரவாளர்.
தம்பி வீட்டில் மீண்டும் ரெய்ட்:
இந் நிலையில் திருப்பூரில் உள்ள நேருவின் தம்பி மணிவண்ணனின் வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புப் போலீசார்ரெய்ட் நடத்தினர்.
ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள இவர் சிறிய பிசினஸ் தான் செய்து வருகிறார். ஆனால், பெரிய வீடும் டயோட்டா குவாலிஸ்காரும் வைத்திருக்கிறார்.
போலீசார் விசாரித்தபோது கார் தன்னுடையது இல்லை எனவும் நண்பருடையது என்றும் கூறினார். இது குறித்து விசாரணைநடந்து வருகிறது.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications