3வது சுற்று இலங்கை அமைதிப் பேச்சு நார்வேக்கு மாற்றம்
ஓஸ்லோ:
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நார்வே தலைநகர்ஓஸ்லோவில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க புலிகளின் அரசியல் பிரிவித் தலைவர் தமிழ்ச் செல்வன், கருணா ஆகியோர் தலைமையிலான 5 பேர் குழுவினர்ஓஸ்லோ வந்துவிட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன.
ஆண்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் இங்கிலாந்தில் இருந்து நேராக நார்வே வந்துவிடுவர்.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றன. இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும்அங்கு தான் நடப்பதாக இருந்தது. ஆனால், அந் நாட்டு மன்னரின் பிறந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் விடுமுறைக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நார்வேக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வன்னி காட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புலிகளின் குழுவினர் கொழும்பு வந்தனர். அங்கிருந்து விமானம் முலம் ஓஸ்லோ வந்துசேர்ந்தனர்.
இலங்கை அரசுப் பிரதிநிதிகள் இன்றும் நாளையும் ஓஸ்லோ வந்து சேருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான 4வது மற்றும் 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாங்காக்கிலும் 6வது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதம் ஜப்பானிலும் நடைபெற உள்ளன.
இதற்கிடையே இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஆதரவு தந்துள்ள டென்மார்க் அரசு ரூ. 1.5 பில்லியன் உதவியும்செய்ய முன்வந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கவும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கவும் அடுத்த3 ஆண்டுகளுக்கு இந்த நிதி வழங்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது.
இந்த நிதி வட கிழக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுத்தப்பட உள்ளது.
இது தவிர இலங்கை அரசுக்கு ரூ. 4.5 பில்லியன் கடன் தரவும் டென்மார்க் முன் வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications