புலிகள்-இலங்கை அரசு இடையே நாளை 3வது சுற்று பேச்சு துவக்கம்
ஓஸ்லோ (நார்வே):
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நார்வேயின்தலைநகரான ஓஸ்லோவில் நாளை துவங்குகின்றன.
இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டன. கடந்த செப்டம்பர் 16 முதல் 18ம் தேதி வரை முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து கடந்தஅக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தாய்லாந்தில் நடைபெற்றன. இந்நிலையில் தாய்லாந்து மன்னரின்பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அங்கு நடைபெறுவதையொட்டி, மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நார்வேக்குமாற்றப்பட்டுள்ளது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு ஐரோப்பிய நாட்டில்நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கானநிதி திரட்டும் மாநாடு கடந்த நவம்பர் 25ம் தேதி ஓஸ்லோவில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரானதமிழ் செல்வன், கடற்புலிகளின் முக்கியத் தளபதியான லெப்டினன்ட் கருணா ஆகியோர் உள்ளிட்டவர்கள் ஓஸ்லோவந்து விட்டனர்.
புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான ஆன்டன் பாலசிங்கமும் அவருடைய மனைவியும்லண்டனிலிருந்து நேரடியாக ஓஸ்லோ வருவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications