கைகோர்க்கும் பரம எதிரிகள்
சென்னை:
எதிரும், புதிருமாக இருந்த புதிய தமிழகம் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் கட்டாய மதமாற்றத்தடைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கைகோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதியகோணத்துடன் பார்க்கப்படுகிறது.
தலித் மக்களிடையே பிரபலமாக உள்ள கட்சிகள் புதிய தமிழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும்.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல, வட மாவட்டங்களில்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மிகவும் பிரபலமாக உள்ளது.
தலித் கட்சிகளாக இருந்தபோதிலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச்சிறுத்தைகளின் திருமாவளவனும் பரம எதிரிகளாகவே இருந்து வந்தனர். இரு கட்சிகளும் முரண்பட்டகருத்துக்களையே கொண்டுள்ளன.
இந்த நிலையில் சமீப காலமாக புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கில் தேய்மானம் ஏற்படத் தொடங்கியது. மாறாகவிடுதலைச் சிறுத்தைகளுக்கு செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
தென் மாவட்டங்களில் அடையாளமே இல்லாமல் இருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்காக தற்போது பலபகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் திருமாவளவன் ஜெயித்து, டாக்டர்கிருஷ்ணசாமி தோற்றதும் இதற்குப் பெருமளவில் உதவியது.
தலித் மக்களுக்காக செயல்படுவதால் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தலித்மக்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்று இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களும், பிற தலித்பிரமுகர்களும் இருவரையும் வலியுறுத்தி வந்தனர்.
அவர்களது யோசனைக்கு இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. வரும் 9ம் தேதி சென்னையில்மாபெரும் பேரணி நடத்தவுள்ளன.
இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும் கலந்து கொள்ளவுள்ளன. இந்த அறிவிப்பைசிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் புடை சூழ திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும்அறிவித்துள்ளனர்.
தலித் மக்களிடையே புகழ் பெற்ற இரு தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்திருப்பது அரசியல் ரீதியிலும் பல்வேறுபேச்சுக்களைக் கிளப்பியுள்ளது. மதமாற்றத் தடைச் சட்ட போராட்டம் மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் இருதலைவர்களும் சேர்ந்து செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இரு தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கைகோர்த்திருப்பது தலித் மக்களிடையே பெரும்உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலித் மக்களின் குரல் இனிமேல் மிகவும் உறுதியாகவும், ஒரே குரலாகவும் ஒலிக்கும் என்று அவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான தலித் இன மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications