திருச்சியில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
திருச்சி:
நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல ரவுடி திருச்சியில் போலீஸாருடன் நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டான்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் ஒரு பிரபல ரவுடி. அங்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில்தொடர்புடையவன் இவன்.
சமீபத்தில் திருச்சி வந்து உறையூர் பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனது நண்பர்களோடு தங்கியிருந்தான்ராஜன்.
இதை அறிந்த நாகர்கோவில் போலீஸார் திருச்சி விரைந்தனர். ராஜன் குடியிருந்த வீட்டை முற்றுகையிட்ட அவர்கள்அவனைப் பிடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட ராஜன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
ஆனால் விடாமல் துரத்திய போலீஸார் அவனைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது தன்னிடமிருந்த அரிவாளால்போலீஸாரை வெட்டினான் ராஜன். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து போலீசார் ராஜனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் குண்டு பாய்ந்து சுருண்டுவிழுந்தான். உடனே அவனைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
பின்னர் காயமடந்ைத அவன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ராஜன் தங்கியிருந்த வீட்டில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள், சைக்கிள் செயின் போன்றவைபறிமுதல் செய்யப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications