ரயில்கள் வராததால் தவித்த பயணிகள் மீது போலீஸ் காட்டுமிராண்டித் தாக்குதல்
சென்னை:
சென்னை-பரங்கிமலையில் ரயில்கள் வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டதால் வேலைக்கும், பள்ளி,கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். கோபமடைந்த பயணிகள் ஆர்பாட்டம் செய்தனர்.இதையடுத்து பெண்கள், முதியோர் உள்ளிட்ட பயணிகளை போலீசார் தடியால் அடித்து ரத்தக் காயம்ஏற்படுத்தினர்.
சென்னை எழும்பூர்-கடற்கரை சந்திப்பு வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதைகள், அகல ரயில் பாதைகளாகமாற்றப்பட்டு வருகின்றன. இதனால் நேற்று முதல் இந்த நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
மேலும் அகல ரயில் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எழும்பூரிலிருந்து கடற்கரை வரைசிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் மணிக்கணக்கில் நின்று கொண்டிருந்தும் கூட ஒரு மின்சார ரயில் கூட அந்தப் பக்கம் வரவில்லை. இதனால்அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோரின்டென்ஷன் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பொறுமை மீறிய பயணிகள் மிகவும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அங்கு மிகவும் தாமதமாக வந்த ஒருமின்சார ரயிலை பயணிகள் கூட்டமாகச் சென்று வழிமறித்தனர்.
கூடுதல் ரயில்களை உடனடியாக விட்டால் தான் ரயிலைப் போக விடுவோம் என்று கூறி அந்த ரயிலைப் போகவிடாமல் தடுத்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அனுப்பினர். விரைந்து வந்த போலீசார் ரயில்மறியலைக் கைவிடுமாறு பயணிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் பயணிகள் மறியலைக் கைவிட மறுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதனால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.
இச்சம்பவத்தில் பல பெண்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்களுக்கு ரத்தக் காயம்ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை போலீசார் விரட்டி விரட்டி அடித்தனர்.
இதையடுத்து அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது. பயணிகள் அனைவரும் கலைந்து ஓடியபின்னர் பல மணி நேரம் கழித்துத் தான் மின்சார ரயில்களே வந்தன.
"நேற்றிலிருந்து அகல ரயில் பாதையில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படிப் பார்த்தால் மொத்தம் 40 ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று பல மணி நேரம்காத்திருந்தும் நான்கு ரயில்கள் கூட வரவில்லை. இதைக் கேட்டதற்காக போலீசார் எங்கள் மீது தடியடிநடத்தியுள்ளனர்" என்று ஒரு பயணி கடும் கோபத்துடன் கூறினார்.
ரயில் பயணிகள் மீது அக்கறை கொண்ட அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
-->












Click it and Unblock the Notifications