தடா வழக்கில் கைதான "அல்-உம்மா" பாஷா உள்பட 19 பேர் விடுதலை
கோயம்புத்தூர்:
கடந்த 1993ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானஅல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 19 பேரை விடுதலை செய்து கோயம்புத்தூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனியில் 1993ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏராளமானவெடிபொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக பாஷா, அல்-உம்மா செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 19 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். தடா சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தடா சட்டம் பின்னர் வாபஸ்பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைதானவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவரையும் விடுதலைசெய்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம்ஆகிய அனைத்துமே தெளிவில்லாமல் இருப்பதால் கைதான அனைவரையும் விடுதலை செய்து தனி நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதையடுத்து பாஷா உள்ளிட்ட இவர்களில் பலர் மீது கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கு இன்னும்நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீண்டும் கோயம்புத்தூர் மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications