ரணில் மீது வாஜ்பாயிடம் சந்திரிகா புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறைப்படி நடக்கவில்லை என பிரதமர் வாஜ்பாயிடம் அதிபர் சந்திரிகா புகார்கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா தலைமையிலான 3 எம்.பிக்கள் குழுவை அவர் டெல்லிக்குஅனுப்பினார்.

இக் குழுவினர் பிரதமர் வாஜ்பாயை இன்று காலை சந்தித்துப் பேசினர். அப்போது சந்திரிகா எழுதிய கடிதத்தையும் வாஜ்பாயிடம்ஒப்படைத்தனர்.

அக் கடிதத்தில் சந்திரிகா கூறியிருப்பதாவது: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானபேச்சுவார்த்தைகளில் பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை என்னிடம் பிரதமர் ரணில்தெரிவிப்பதில்லை.

என்னிடம் பல விஷயங்களை மூடி மறைக்கிறார்கள். எனவே, இதில் நீங்கள் (வாஜ்பாய்) தலையிட்டு இந்தப் பேச்சுவார்த்தைவிவரங்களை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று ரணிலிடம் கூற வேண்டும்.

இவ்வாறு அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வாஜ்பாயைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அனுரா பண்டாரநாயகா நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சந்திரிகா முட்டுக்கட்டை போடுவதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.அவர் பேச்சுவார்த்தைகளை முழுமையாக ஆதரிக்கிறார்.

ஆனால், அவை இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது. வட கிழக்குப் பகுதியில் மனித உரிமைகளையும்,ஜனநாயகத்தையும் காக்கும் வகையில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச வேண்டும் என்று தான் சந்திரிகா கோருகிறார்.

விடுதலைப் புலிகளைக் கையாள்வதில் ரணில் விக்கிரமசிங்கேயை விட அதிக அனுபவம் பெற்றவர் சந்திரிகா. அதைமறந்துவிட்டு ரணில் செயல்படக் கூடாது என்றார் அனுரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+