பாலகங்காவை சென்னை மேயராக அறிவிக்க அதிமுக வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயராக அதிமுகவைச் சேர்ந்த பாலகங்காவை அறிவிக்க வேண்டும் என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. டாக்டர் மைத்ரேயன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக மைத்ரேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஸ்டாலினிடமிருந்து சென்னை மேயர் பதவிபறிக்கப்பட்டது. அவர் 2வது முறையாக மேயராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கோர்ட் கூறியிருந்தது.
இதனால் ஸ்டாலினிடம் இருந்து மேயர் பதவியை அரசு பறித்தது சரி தான் என்று நீதிமன்றம் கூறியது.
இப்போது மேயர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் நடக்கவுள்ளது. துணைமேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக மட்டுமே இருக்கலாம், மேயரின் அங்கியை அணிவது, காரில்மேயர் கொடியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந் நிலையில் கடந்த மேயர் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தபாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை மேயர் தேர்தலுக்குப் போட்டியிட்ட 20 பேரில் ஸ்டாலினுக்கு 5,68,450 ஓட்டுக்கள் கிடைத்தன.பாலகங்காவுக்கு 5,63,438 ஓட்டுக்கள் கிடைத்தன.
எனவே இரண்டாவது இடத்தைப் பிடித்த பாலகங்காவை மேயராக அறிவித்து கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றுஅதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரணைக்கு ஏற்றது.
வரும் 5ம் தேதிக்கு இம்மனு மீதான விசாரணை நடக்கும்.
-->
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications