கடற்படையினர் மீது மீனவர்கள் தாக்குதல்: தஞ்சை அருகே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டனத்தில் கடற்படை வீரர்களுக்கும், மீனவர்களுக்கும் இடையே நடந்த மோதலில்7 கடற்படை வீரர்களும், 4 மீனவர்களும் காயமடைந்தனர்.

மல்லிப்பட்டனத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சிலர் சமீபத்தில் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்துமல்லிப்பட்டனம் கடற்பகுதியில் கடற்படை வீரர்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கடற்படை வீரர்கள் கடலுக்குள் ரோந்து சென்று விட்டு கரைதிரும்பினர். அப்போது கரையில் இருந்த விசைப் படகு மீனவர்களுக்கும், கடற்படை வீரர்களுக்கும் இடையேபலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பின்னர் கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் விசைப் படகு மீனவர்கள் தாக்கியதில் 7 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 2பேருக்கு படுகாயம் ஏற்படவே தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதேபோல 4மீனவர்களும் தாக்குதலில் காயமடைந்தனர்.

மேலும் பிரச்சினை பெரிதாகி விடாமல் தவிர்க்கும் பொருட்டு மல்லிப்பட்டனத்தில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+