இந்திரகுமாரி மீது தவறான பிரிவில் கீழ் வழக்கு
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த இலவச வேட்டி- சேலை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீதுதவறான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறைஅதிகாரியே நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரியும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து மாபெரும் மோசடிகள்செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் இலவச சேலையின் நீளத்தை குறைத்துஅதில் கோடிக்கணக்கில் சுருட்டியதாக புகார் உண்டு.
இதையடுத்து திமுக ஆட்சியில் இந்திரகுமாரி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது 2-வது சிறப்புநீதிமன்ற நீதிபதி பொன்னுசாமி முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணை அதிகாரிசேஷசாயி கூறுகையில்,
இந்திர குமாரி மீது இந்திய குற்றவியல் சட்டம் 407 (ஏ) பிரிவின் கீழ் நான் வழக்குப் பதிவு செய்தேன். ஆனால்,அப்படி ஒரு பிரிவே சட்டத்தில் இல்லை. தவறுதலாக அதுபோல செய்து விட்டேன் என்றார் அவர்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து குறுக்கு விசாரணையும் நடந்தது. சேஷசாயி தற்போது சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில்துணை கமிஷனராக உள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சி போனதும் இந்திரா குமாரியும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அவரைஜெயலலிதாவும் ஒதுக்கியே வைத்துள்ளார்.
தனது மகளை நடிகர் ராஜசேகரின் தம்பி செல்வாவுக்கு மணம் முடித்து வைத்த இந்திரா குமாரி பினாமிகள் மூலம்பிலிம் பைனான்சிலும் ஈடுபட்டு வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications