இஸ்லாமிய தீவிரவாதிகள் வேட்டையில் சிக்கிய தேனி நக்சலைட்

Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதிலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளைத் தேடி போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வரும்வேளையில், தேனி பகுதியில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்து ஆள் சேர்த்துக் கொண்டிருந்த வாலிபர்சிக்கியுள்ளார்.

25 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுறுவியிருப்பதாகவும், டிசம்பர் 6ம் தேதி அவர்கள் பல்வேறுசதி வேலைகளில் ஈடுபடவிருப்பதாகவும் வந்துள்ள தகவல்களால் தமிழகமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

இவர்களில் 13 பேர் பிடிபட்டுவிட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள தீவிரவாதிகளை போலீஸார் வலை வீசித்தேடி வருகின்றனர். இந்த வலையில் நக்சலைட் ஒருவர் சிக்கியுள்ளார்.

தேனி அருகே உள்ளது சீலையம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். எம்.எஸ்சி. பட்டதாரியானராஜாராம், தமிழ்நாடு மக்கள் விடுதலைப் படை என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வந்துள்ளார். சென்னைஉள்ளிட்ட சில இடங்களில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனது இயக்கத்திற்கு தனது ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏதும் பதுங்கியிருக்கிறார்களா என்ற விசாரணையில் ஈடுபட்ட லோக்கல்போலீசாருக்கு ராஜாராமின் செயல்கள் குறித்த விவரம் தெரியவந்தது.

உடனே தென் மண்டல டி.ஐ.ஜிக்கு தகவல் தந்தனர். அவர் மதுரையில் இருந்து சிறப்புப் படையை அனுப்பிராஜாராமை கைது செய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட ராஜாராம் பின்னர் மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு சிபிசிஐடி போலீஸார் ராஜாராமை விசாரித்து வருகின்றனர்.

அச்சத்தில் பா.ம.கவினர்:

இதற்கிடையே தர்மபுரி மாவட்டத்தில் திடீரென இத்தனை நக்சலைட்டுகள் பிடிபட பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் காரணம் என்றுதெரியவந்துள்ளது.

சென்ராயன்மலை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வன்னியர் நிறைந்த இந்தப் பகுதியில் பா.ம.கவினர் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நக்சலைட்டுகள் தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.

பொது மக்களுக்கு தொல்லை தந்த இந்த அடாவடி பா.ம.கவினரை நக்சலைட்டுகள் எச்சரிக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கள் தான்நக்சல்களை குறித்து போலீசுக்குத் தகவல் தந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நக்சலைட்டுகள் தங்கள் தலையை குறி வைக்கலாம் என்ற அச்சத்தில் பா.ம.க. தலைவர்கள் உறைந்து போயுள்ளனர். இதைவெளியிலும் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+