காடுவெட்டி குரு சரண்: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்
அரியலூர்:
நீதிபதியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏவும் ராமதாசின் வலது கரமுமான காடு வெட்டி குருஇன்று அரியலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின குழுவினரைபதவியேற்கவிடாமல் பாட்டாளி மக்கள் கட்சியினர் தடுத்தனர்.
வன்னியர் தவிர வேறு ஜாதியினர் யாரும் இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கக் கூடாது என்று கூறி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியும், காடுவெட்டி குருவும் தகராறு செய்தனர். மேலும் நீதிபதியை கேவலமாகவும் பேசினர். அவர்களுடன் இருந்த பிற பா.ம.கவினர் நீதிபதியைதாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து இந்த பா.ம.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வேப்பேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு 25 பா.ம.கவினரைக் கைது செய்தனர்.
ஆனால், ஜி.கே. மணி, காடுவெட்டி குரு மற்றும் 31 பா.ம.கவினர் தலைமறைவாகிவிட்டனர்.
இதில் மணி சமீபத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன்மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஆனால், காடுவெட்டி குரு மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுதேடுதல் வேட்டேயில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் காடுவெட்டி குரு மற்றும் பா.ம.கவினரான ரவி, சண்முகம், கலியபெருமாள், மணிகண்டன் ஆகியோரும் இன்று அரியலூர்குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன் சரணடைந்தனர்.
அவர்களை 7 நாட்கள் திருச்சி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வரும் 12ம் தேதி இவர்களை சென்னை 14வது குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் ஆணையிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து திருச்சிசிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 31 பா.ம.கவினரையும் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
காடுவெட்டி குரு ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவராவார்.
-->
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications