மதமாற்ற தடை சட்டம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்கா ஒரு அறிவிப்பு வெளியிட்டால் மாநிலத்துக்கு வரவேண்டிய எல்லா அன்னிய முதலீடும் ஒட்டுமொத்தமாக நின்றுபோய்விடும். இதனால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி மிக பயங்கரமாக பாதிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் ஆந்திரம், கர்நாடகம்தான் முன்னணியில் நிற்கின்றன. இந்தியாவுக்குவரும் எந்த வெளிநிாட்டுத் தலைவராக இருந்தாலும், டெல்லிக்கு அடுத்தபடியாக பெங்களூருக்கும்,ஹைதராபாத்திற்கும்தான் செல்கிறார்கள். சென்னைப் பக்கமே யாரும் எட்டிப் பார்ப்பதில்லை.
இந் சூழ்நிலையில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படுமானால், அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ நாடுகள்தமிழகத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இதற்கான முயற்சிகளும்தொடங்கிவிட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த மத சுதந்திர கமிஷன் இது தொடர்பாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும்அமெரிக்க அரசுக்கும் சில பரிந்துரைகச்ை செய்துள்ளது. இதை ஏற்று அமெரிக்க அரசு ஒரு அறிவிப்பைவெளியிட்டால் தொழில் முதலீடுகள் அடியோடு நின்று போகும் அபாயம் உள்ளது.
எனவே இந்தப் பிரச்சினையை தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைவாபஸ் பெறுவதுதான் ஒரே வழி.
நீதித்துறையில் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. ஏழை, எளிய மக்களும் எளிய முறையில் நீதித்துறையை அணுகும்வகையில் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். இதனைக் களைய தேசிய நீதிக் கமிஷனை உருவாக்கவேண்டும்.
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.விரைவில் அவை வெளிவந்து குற்றவாளிகளின் முகத்திரையைக் கிழிக்கும்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், அந்தஅறக்கட்டளையில் வன்னியர் தவிர மற்றவர்கள் இடம் பெறுவது சரியில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஜி.கே. மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோருவது, அருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது போன்றசெயல்களில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதன்முலம் பா.ம.கவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
எதிர்க் கட்சியினர் வீடுகளில் அதிரடி சோதனைகள், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தூக்கி அடிப்பதுபோன்ற செயல்களை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைகளில் கொஞ்சமாவது கவனம் செலுத்த ஜெயலலிதா அரசுமுன் வர வேண்டும்.
பவானி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுக்க கேரளம் முயல்கிறது. இதனால்கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாட்ட விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். நீலகிரியில் உருவாகும் இந்த ஆறுகேரளாவுக்குள் நுழைந்துவிட்டு தமிழகம் வருகிறது. அதில் அணையைக் கட்டி நீரை முடக்க கேரளம் முயல்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தூக்கம் போட்டுத் தான் காவிரியின்குறுக்கே பல அணைகளைக் கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தந்தோம். இப்போது நீருக்கு ஏங்கி நிற்கிறோம். கேரளவிஷயத்தில் உடனே இந்த அரசு விழித்து எழுந்து எதையாவது செய்ய வேண்டும்.
-->
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications