சென்னையில் போலி டிகிரி சான்றிதழ் அமோக விற்பனை: 5 பேர் கைது
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின்பெயர்களில் போலி சான்றிதழ்களைத் மோசடியாகத் தயாரித்து விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பலை சி.பி.சி.ஐ.டி.போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் சின்னப் பையன் என்ற நபர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏராளமானபோலி பல்கலைக்கழக சான்றிதழ்கள், போலி தபால் முத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
சின்னப் பையனிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து தற்போது மேலும் ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மூலக்கொத்தளம் என்ற இடத்தில் ராஜமாணிக்கம், ராஜேந்திரன், பழனி, வெங்கடேசன்உள்ளிட்ட ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழக போலி மதிப்பெண் பட்டியல், பட்ட சான்றிதழ்கள்உள்ளிட்டவற்றை விற்று வந்துள்ளனர். இவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான போலி சான்றிதழ்களை போலீசார்பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான போலி சான்றிதழ்கள் விற்கப்பட்டு விட்டன. அவற்றைக் காட்டிஏராளமான இளைஞர்கள் பல வேலைகளிலும், மேற்படிப்புகளிலும் சேர்ந்தும் விட்டனர்.
இந்த போலி சான்றிதழ்களை வாங்கியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து தீவிரவிசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ரமணி கூறினார்.
மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயரிலும் போலிச் சான்றிதழ்கள் தயாரித்து எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்களும்தந்துள்ளது இந்தக் கும்பல்.
-->












Click it and Unblock the Notifications