சென்னை மேயர் தேர்தலுக்குத் தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்தக் கூடாது என்று கோரி அதிமுக எம்.பி. மைத்ரேயன் தொடுத்திருந்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேயர் தேர்தல் எப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றுதேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.பி. மைத்ரேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மேயர் பதவியிலிருந்துமு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அதிமுகவேட்பாளர் பாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மற்றொரு மனுவில், மாநில அரசின் நிதி நெருக்கடியில், இப்போது மீண்டும் மேயர் தேர்தலை நடத்தினால்செலவீனம் ஏற்படும். எனவே மேயர் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,மேயர் தேர்தல் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு வக்கீலிடம்கேட்டனர்.
அப்போது, தேர்தல் தொடர்பான பணிகள் திட்டமிடப்பட்டுக் கொண்டிருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டமிடப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
நாளைக்குள் மேயர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தேதியை மாநில தேர்தல் ஆணையம் கோர்ட்டில்தெரிவிக்க வேண்டும்.
மேயர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றுஉத்தரவிட்டு, மைத்ரேயனின் மனுவை நிராகரித்தனர்.
அடுத்து தேர்தல் நடந்தால் அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிட நிறைய வாய்ப்பு உள்ளது.
-->
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications