கேரளாவுக்கு தமிழக ரேஷன் அரிசியை கடத்த முயற்சி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் 280 மூட்டை ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற அரிசி ஆலை அதிபரைபோலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் அரிசி ஆலை வைத்திருப்பவர் விநாயக மூர்த்தி.
இவரது அரிசி ஆலையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 280 மூட்டை ரேஷன் அரிசி அங்குபதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து ஆலையில் இருந்த 2பேரை போலீஸார் கைது செயதுள்ளனர்.
இந்த விவரம் அறிந்த விநாயக மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதே அரிசி ஆலையில் சமீபத்தில் போலி தேயிலைத் தூளை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications