நூற்றுக்கணக்கில் குவிந்த மாட்டு வண்டிக்காரர்கள்: உயர் நீதிமன்றத்தில் பதற்றம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஒரே நேரத்தில்குவிந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீஸாரும் அங்கு அதிக அளவில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை நகரில் பகல் நேரத்தில் மாட்டு வண்டிகளை ஓட்டக் கூடாது என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.இதை எதிர்த்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நகருக்குள் மாட்டு வண்டிகளை ஓட்டியபோது, போலீஸார் அவர்களைத் தடுத்தனர்.இதையடுத்து போலீஸார் மீது உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிஉரிமையாளர்களும், தொழிலாளர்களும் கோர்ட் வளாகத்தில் கூடினர்.
இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கு ஏராளமானபோலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 27ம் தேதி வரைமாட்டு வண்டிகளைப் போலீஸார் தடுக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாட்டு வண்டி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கலைந்து சென்றனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications