சிறந்த கலெக்டர்களுக்கு விருதுகள் வழங்கினார் ஜெ.
சென்னை:
சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்களுக்கு தங்கப் பதக்கம்,கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு இன்று நடந்தது. இதில் ஜெயலலிதாகலந்து கொண்டு உரையாற்றினார்.
கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம், தரிசு நில மேம்பாடு, வறட்சி நிவாரணப் பணிகள், மழை நீர் சேகரிப்பு,வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 27 அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின்போது சிறந்த கலெக்டர்கள் விருது நான்கு மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டது. மணிவாசகம்(திருச்சி), ராஜாராமன் (காஞ்சிபுரம்), விஜயக்குமார் (ராமநாதபுரம்), ராஜேஷ் லக்கானி (பெரம்பலூர்) ஆகியநான்கு கலெக்டர்களுக்கும் தங்கப் பதக்கம், ரூ.25,000 பரிசு மற்றும் சான்றிதழ்களை ஜெயலலிதா வழங்கினார்.
இதுதவிர மக்கள் குறைகளை உடனுக்குடன் கேட்ட தீர்த்தது, பெண்கள் நலத்திற்காக பாடுபட்டது ஆகிய இரண்டுசேவைகளுக்காக சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பு விருது வழங்கினார் ஜெயலலிதா.
இதுதவிர 20 அம்சத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சிவகங்கை மாவட்ட கலெக்டர் சந்தோஷ் பாபுஉள்ளிட்ட 15 கலெக்டர்களுக்கும் சிறப்பு விருதுகளை வழங்கினார் முதல்வர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications