எங்கள் தொழிலை கெடுத்து மெரீனாவை அழகாக்க வேண்டுமா?- மீனவர்கள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தைக் கண்டித்து கடற்கரையோர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

மெரீனா கடற்கரையையொட்டி ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் கடற்கரையில் கட்டுமரங்களும், படகுகளும், மீன் பிடி வலைகளும் எப்போதும் அதிக அளவில் காணப்படும்.

இதனால் மெரீனா கடற்கரையின் அழகு கெடுவதாக கூறி அதை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் தங்களது மீன்பிடி தொழில்பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழக மீனவர் சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மீன் பிடி வலைகள், படகுகள், கட்டுமரங்களை அகற்றும் செயலை உடனடியாக அதிகாரிகள் நிறுத்த வேண்டும்,மீன் பிடி தொழிலை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மெரீனா அழகுபடுத்தும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+