நக்சலைட்டை கொன்ற போலீசார் மீது நடவடிக்கை: மனித உரிமை அம்ைபுகள் கோரிக்கை
சென்னை:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நக்சலைட் சிவாவை சுட்டுக் கொன்ற போலீஸார் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று சில மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக மக்கள் மனித உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மார்க்ஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
சிவா என்ற பார்த்திபன் என்பவர் ஊத்தங்கரையில் நடந்த நக்சலைட் வேட்டையின்போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போலீஸார் உள்நோக்கத்துடன்தான் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இதை சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமற்றொரு நக்சலைட்டான விநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் ரவீந்திரன் என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதைநேரில் பார்த்த ஒரே சாட்சி சிவா மட்டுமே. இதை மனதில் வைத்துக் கொண்டே சிவாவை போலீஸார் சுட்டுக்கொன்று விட்டனர்.
சிவா தப்பியோடவே இல்லை. சரணடையத் தயாராக நின்ற அவரை போலீசார் வேண்டுமென்றே சுட்டுக்கொன்றனர். சாட்சியை அழிப்பதிலேயே போலீசார் தீவிரமாக இருந்துள்ளனர் என்பது இதனால் உறுதியாகிறது.
தேசிய மனித உரிமை கமிஷன் விதிமுறைப்படி சிவாவை சுட்டுக் கொன்ற போலீஸார் மீது எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இதே போலவே வேறு சில மனித உரிமை அமைப்புகளும் சிவாவை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தன.
-->


Click it and Unblock the Notifications
