பஸ் இன்றி தவிக்கும் பம்மல் மக்கள் சாலை மறியல்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் சாலைகள் மோசமாகஇருந்ததால் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு சென்னை நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன.பம்மல், பொழிச்சலூர் பகுதியில் உள்ள சாலைகளும் மோசமாக சேதமடைந்தன.
இதனால் டவுன் பஸ்களை ஓட்டவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு டவுன்பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டது. சாலைகள் சரியானவுடன் பஸ்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு வாரமாகியும் இன்னும் பஸ் சர்வீஸ் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அலுவலகம், பள்ளி,கல்லூரிகளுக்குப் போவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்மல் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேற்றுப் பாதையில் பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி தந்ததையடுத்துபோராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications