பா.ம.க. தலைவர் ஜி.கே. மணிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னைஉயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
செங்கல்வராயன் அறக்கட்டளைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி உள்ளிட்டவர்களைப் பதவியேற்க விடாமல்தடுத்ததாக மணி, பா.ம.கவின் எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு உள்ளிட்ட 62 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து 27 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மணி மற்றும் காடுவெட்டி குரு உள்ளிட்ட பலர்தலைமறைவாகிவிட்டனர். பின்னர் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மணியும், அரியலூர்நீதிமன்றத்தில் குருவும் சரணடைந்தனர்.
தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மணி தாக்கல் செய்த மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவர் மற்றொரு ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ. பாக்யராஜ், மணி உள்பட 26 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கஉத்தரவிட்டார். மணியை ரூ.5,000 கட்டி சொந்த ஜாமீனிலும், இரு நபர் ஜாமீனிலும் விடுவிக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
தினமும் எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வந்து கையெழுத்துப் போட வேண்டும் மற்றும் செங்கல்வராயன்அறக்கட்டளை நிர்வாகிகளுக்குத் தொந்தரவு தரக் கூடாது ஆகிய நிபந்தனைகளின் பேரில் தான் மணிக்கு ஜாமீன்அளிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications