நடுக்கடலில் வடகொரிய கப்பல் மறிப்பு: ஏவுகணைகளைகள் பறிமுதல்
வாஷிங்டன்:
வட கொரியாவில் இருந்து ஏதோ ஒரு நாட்டுக்கு ஏவுகணைகளைக் கடத்திச் சென்ற கப்பலை அமெரிக்க கடற்படை அரபிக்கடலில் வைத்து சிறை பிடித்தது.
இதை வழக்கம் போல் பாகிஸ்தான் மறுத்தது. ஆனால், பாகிஸ்தானில் இருந்து அணு உலை கருவிகளை ஏற்றிச் சென்றவிமானத்தையும் அது வட கொரியாவில் தரையிறக்கப்பட்டதையும் அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் படம்பிடித்துவிட்டன.
அதே போல இப்போது ஸ்கட் ரக ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற வட கொரியாவைச் சேர்ந்த சூ சன் என்ற கப்பலை அமெரிக்கசெயற்கைக் கோள்கள் கண்டுபிடித்தன. இதையடுத்து இந்தக் கப்பல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
நேற்று அந்தக் கப்பலை அரபிக் கடலில் ஏமன் நாட்டில் இருந்து சுமார் 950 கி.மீ. தூரத்தில் வைத்து அமெரிக்க கடற்படைக்கப்பல்களும் ஸ்பெயின் நாட்டு கடற்படையினரும் சுற்றி வளைத்தனர்.
சரணடைந்த அந்த கொரியக் கப்பலில் 12 ஸ்கட் ஏவுகணைகளும் அதன் உதிரிப் பாகங்களும் இருந்தன. இந்த ரகஏவுகணைகளைத் தான் கடந்த முறை வளைகுடா போரின் போது ஈராக் பயன்படுத்தியது.
வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு நிலவியதேஇல்லை. ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உலகின் பல நாடுகளுக்கும் விற்று வருவதாக வட கொரியாவை அமெரிக்க தொடர்ந்துகுறை கூறி வந்தது. இப்போது தான் முதன்முறையாக அந் நாட்டுக் கப்பலையே வழி மறித்துப் பிடித்துள்ளது.
முதல்லி இந்த ஏவுகணைகள் ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவை ஏமன் நாட்டுக்குஅனுப்பப்பப்பட்டதாக கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
வட கொரியாவின் கப்பலைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சே நேரடியாக உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
-->
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications