குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய உயர் நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்:
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கமலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது.
ரூ.64 கோடி போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபரான குவாத்ரோச்சி முக்கியக்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரிப்பதற்காக அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும்முயற்சிகளை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.
தற்போது மலேசியாவில் உள்ள அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அங்குள்ள செசன்ஸ்நீதிமன்த்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருந்தது.
ஆனால் குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று மலேசிய செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 2ம்தேதி அம்மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மலேசிய உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல் முறையீடுசெய்தது.
ஆனால் உயர் நீதிமன்றமும் சி.பி.ஐயின் மனுவை இன்று தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ. தாக்கல் செய்தஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் போதுமானதாக இல்லை என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
ஆனாலும் சி.பி.ஐ. விடவில்லை. உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை எதிர்த்து மலேசிய உச்ச நீதிமன்றத்தில்(அங்கு அதன் பெயர் "கோர்ட் ஆப் அப்பீல்") சி.பி.ஐ. மேல் முறையீடு செய்துள்ளது. இந்தியாவின் சார்பாகமலேசிய அட்டர்னி ஜெனரல் அலுவலகமே இந்த மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications