6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னை:
கடந்த 6 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை திடீரென மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த தீபாவளியையொட்டி தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.492 வரை விற்றது. தீபாவளிமுடிந்த பின்னர் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.487 ஆகக் குறைந்தது.
ஆனால், இன்று ஒரே நாளில் தமிழக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ. 100 உயர்ந்துள்ளது.தொடர்ந்து இது மேலும் உயரும் என்று தெரிகிறது. நேற்று கூட 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்குரூ.492ஆகத்தான் இருந்தது.
ஆனால், இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிராம்தங்கத்தின் விலை ரூ.504 ஆகும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போதுதான் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. கடந்த 1997ம் ஆண்டு துவக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.500 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் விலை ரூ. 500க்குக் கீழ் தான் இருந்தது. ஆனால், தற்போது கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு நெருங்கி வருவதையொட்டி தங்கத்தின் விலை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,இந்த அளவுக்கு உயரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச மார்க்கெட்டில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு சிறிது வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்தே தங்கத்தின் விலைகிடுகிடுவென்று உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இராக் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர்தொடுக்கலாம் என்ற காரணத்தால் பெட்ரோலியம் மற்றும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என்றுகூறப்படுகிறது.
விலை அதிகமாக இருப்பதால் சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் வாங்குவதற்கு இந்திய வியாபாரிகள் மிகவும்தயக்கம் காட்டி வருகின்றனர். அதனாலும் விலை உயர்ந்துவிட்டது என்றார் சென்னை தங்க, வைர வியாபாரிகள்சங்கத்தின் தலைவர் பாண்டுரங்கன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications