பத்திரிக்கை ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
சென்னை:
சென்னையில் பத்திரிக்கை ஆசிரியரிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுலாக்-அப்பில் அடைக்கப்பட்டார்.
சென்னை-தேனாம்பேட்டையில் "ஈவினிங் போஸ்ட்" பத்திரிக்கையின் அலுவலகம் உள்ளது. அதன் ஆசிரியர்சிவகுமார்.
பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சிவகுமாருக்கும் மற்றொவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதையடுத்துபோலீசாரிடம் சிவகுமார் புகார் செய்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம்,தனக்கு ரூ.2,000 கொடுக்கவில்லை என்றால் கைது செய்து சிறையில் வைத்து விடுவேன் என்று சிவகுமாரைமிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிவகுமார், "எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். பணம் தருகிறேன்" என்று கூறிவிட்டு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் அவர் நேராக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புபோலீசாரின் ஆலோசனையின் பேரில் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த வெங்கடாசலத்திடம் அவர்கள்கொடுத்திருந்த ரூ.2,000 பணத்தை சிவகுமார் கொடுத்தார்.
வெங்கடாசலமும் வாய் நிறைய சிரிப்புடன் அந்தப் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புபோலீசார் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட வெங்கடாசலம், வெளியே ஓடி வந்து தன் ஜீப் டிரைவரின் கையில்பணத்தைத் திணித்து விட்டு ஒன்றுமே தெரியாதவர் போல நின்றார்.
இருந்தாலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விடவில்லை. வெங்கடாசலத்தைக் கைது செய்து அந்தப் பணத்தையும்பறிமுதல் செய்தனர்.
பின்னர் மற்ற போலீசாருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக வெங்கடாசலத்தை லாக்-அப்பில் அடைக்கலஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டரான வெங்கடாசலமே லாக்-அப்பில் அடைக்கப்பட்டார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications