நாளை தமிழகம் வருகிறார் கலாம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை சென்னை வருகிறார்ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வரும் டாக்டர் கலாமுக்கு சிறப்பான வரவேற்புஅளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 10.30 மணிக்கு இந்திய விமானப்படையின் சிறப்பு போயிங் விமானம் மூலம் சென்னை வந்துசேர்கிறார் டாக்டர் கலாம்.
அங்கிருந்து நேராக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலாம், காலை 11 மணிக்கு வெள்ளிவிழாநிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
பின்னர் தரமணியில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார். அதைத்தொடர்ந்து பகல் 1.15 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் அளிக்கும் மதியவிருந்தில் கலந்து கொள்கிறார். அங்கு பார்வையாளர்களையும் டாக்டர் கலாம் சந்திக்கவுள்ளார்.
அன்று மாலை அண்ணாமலை அரங்கில் நடக்கும் தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழாவில் கலந்து கொண்டுவிட்டு,நாளை இரவு ராஜ் பவனிலேயே தங்குகிறார்.
அதன் பிறகு நாளை மறுநாள் காலை 11 மணிக்கு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் டாக்டர்கலாம், அங்குள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.
அன்று மாலை சென்னை மியூசிக் அகாடமியின் பவள விழாவிலும் டாக்டர் கலாம் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் அன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி கிளம்பிச் செல்வார் டாக்டர் கலாம்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications