சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது: ராமதாஸ்
சென்னை:
சாத்தான்குளம் சட்டசபை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. இந்தத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போவதும் இல்லை.
இருந்தாலும் இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவுசெய்யவில்லை.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் திடீர் மரணம் எனக்குப் பெரும் வேதனையை அளிக்கிறது.
நாகப்பாவின் மனைவி பரிமளா, மகன் ப்ரீத்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும், கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கேயும் சென்னை வந்து வீரப்பனிடமிருந்து அவரை விடுவிக்க உதவ வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்தும் கூட ஜெயலலிதா மெத்தனமாக நடந்து கொண்டார்.
தமிழக அரசு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் வீரப்பனிடமிருந்து நாகப்பாவை உயிருடன்மீட்டிருக்கலாம்.
மர்மமான முறையில் நாகப்பா இறந்தது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்ராமதாஸ்.
புதிய வீராணம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு தமிழகஅரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் ராமதாஸ் கூறினார்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications