சென்னையில் மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை: ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் ஒரு ஏற்றுமதி நிறுவன அதிபரின் வீட்டு ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே புகுந்து ரூ.8 லட்சம்மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் அமெரிக்க டாலர்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர் கொள்ளைகளால் சென்னை மாநகரமே பெரும் பீதியில் உறைந்து கிடந்தது.இவை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் கொள்ளைச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்தியம். இவர் ஒரு ஏற்றுமதி நிறுவன அதிபர். தொழில் விஷயமாக குடும்பத்துடன்வெளிநாடு சென்றிருந்த சத்தியம் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியிருந்தார்.
சத்தியமும் அவருடைய குடும்பத்தினரும் வீட்டின் அருகே உள்ள வேறொரு இடத்தில்தான் தூங்குவது வழக்கம்.அதுபோலவே நேற்றிரவும் தூங்கச் சென்ற அவர்கள், இன்று காலை தூங்கி எழுந்து வந்து வீட்டின் கதவைத்திறந்தனர்.
அப்போதுதான் வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பதறிப் போன அவர்கள் உடனேவீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவிலிருந்து 900 அமெரிக்க டாலர்கள், ரூ.1 லட்சம்மதிப்புள்ள நகைகள், பாத்திரங்கள் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இதுகுறித்து போலீசாரிடம் சத்தியம் புகார் கொடுத்தார். போலீசாரும் விரைந்து வந்து கைரேகைகளைச் சேகரித்து,தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications