இந்தியாவை ஏமாற்றிய துபாய்: பாகிஸ்தானில் அனீஸ்
துபாய்:
தாதா தாவூத் இப்ராகிமின் தம்பியும், மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவனுமான அனீஸ் இப்ராகிமை கைதுசெய்த துபாய் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவனை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டதுதுபாய்.
இவனது தம்பி அனீஸ் இப்ராகிம் மீதும் இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள்,மற்றும் பிற சினிமா துறையினரிடம் பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் அதிபர்களைக் கடத்தி பணம் பறிப்பது போன்றசெயல்களில் இன்னும் தாவூத் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணம் பறிப்புகளில் தாவூதுக்கு அனீஸ் முழு உதவி செய்து வருகிறான். இவனும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தான்.
ஆனால், துபாயிலும் தாவூத் கும்பலுக்கு பெரும் சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளன. இதனை அனீஸ் தான் மேற்பார்வையிட்டுவருகிறான். இவனையும் தாவூதையும் பிடிக்க இன்டர்போல் உதவியை சி.பி.ஐ. நாடியது.
இந் நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி அனீஸ் பாகிஸ்தானில் இருந்து துபாய் வந்து இறங்கினான். இதை இந்திய உளவுப்பிரிவினர் உடனே இன்டர்போலுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து அவனைக் கைது செய்யுமாறு துபாய் போலீசுக்குஇன்டர்போல் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ள இந்தியாவுக்கும் ஐக்கியஅரபு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் அனீசை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய அரபுநாடுகளிடம் இந்தியா கோரியது.
அவனை இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. குழு துபாய் போனது. ஆனால், அவனை சிறையில் இருந்து விடுவித்த துபாய் போலீசார்பத்திரமாக பாகிஸ்தான் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.
பாகிஸ்தான், சவுதி அரேபிய அரசுகளின் நெருக்குதலால் அவனை இந்தியாவிடம் துபாய் ஒப்படைக்கவில்லை என்றுகூறப்படுகிறது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications