Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டோ டிரைவர்கள்- ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூட்டு சதி: மினி பஸ்கள் மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்ட மினி பஸ்களை ஒழித்துக் கட்டுவதில் ஆட்டோடிரைவர்களும் ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் கைகோர்த்து இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உருப்படியான சில திட்டங்களில் ஒன்று மினி பஸ். அரசு பஸ்கள்செல்லாத பாதைகள், ஊர்களுக்கு இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆட்டோ டிரைவர்களின்கொள்ளையில் இருந்து ஏழை, நடுத்தர மக்கள் தப்பினர்.

ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தத் திட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக இருந்து வருகிறது.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் வேறு வழியில்லாம மினி பஸ்களை இயங்க விட்டுள்ளது அதிமுகஅரசு.

மினிபஸ்கள் இயங்க ஆரம்பித்ததில் இருந்து மீட்டரும் போட மாட்டோம், கேட்பதைத் தர வேண்டும் என்றதிமிருடன் செயல்பட்டு வரும் ஆட்டோ டிரைவர்களின் வாயில் மண் விழுந்தது. இதன் பின்னராவது திருந்தி மீட்டர்போட்டு ஓட்டியிருக்கலாம் ஆட்டோ டிரைவர்கள். ஆனால், அதைச் செய்யவில்லை.

மினி பஸ்களைத் தாக்குவது, கல் எறிவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர். முதலில் பொறுமையாக இருந்த மினிபஸ் டிரைவர்கள் பதிலுக்கு அடிக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் தான் ஆட்டோ டிரைவர்கள் அடங்கினர்.

இனி அடிதடியால் மினி பஸ்களை சமாளிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டோ கும்பல் ஆர்.டி.ஓ.அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு மினி பஸ்களை ஒடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

மதுரையில் வண்டியூர் பகுதியில் சவுராஷ்டிரா காலனியில் இருந்து கிட்டத்தட்ட 20 மினி பஸ்கள் வரை ஓடுகின்றன.இந்த பஸ்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூட்களைத் தவிர வேறு ரூட்களிலும் ஓடுவதாகவும், அதனால் தங்களதுவருமானம் பாதிக்கப்படுவதாவும் ஆட்டோ டிரைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரை உடனடியாக ஏற்று விசாரிக்க ஓடி வந்தனர் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள். விசாரிக்க வந்தஅதிகாரிகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் ஏதோ போலீஸ் போல செயல்பட்டு உதவினர்.

மினி பஸ் டிரைவர்களை டேய், இங்கே வா, ஆர்.சி. புக் எடு என்று ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் மாதிரி கேட்க,மினி பஸ் டிரைவர்கள் கடுப்பாகினர். எங்களைத் தட்டிக் கேட்க நீங்கள் யார் என்று அவர்கள் கேட்க வாக்குவாதம்ஏற்பட்டது.

நாங்கள் ரூட் மாறி ஓட்டவில்லை, ஆட்டோ டிரைவர்கள் தவறான புகார் தந்துள்ளனர் என்று மின் பஸ் டிரைவர்கள்சொன்னதை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் காதிலேயே வாங்கவில்லை.

ஆனால், ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பேச அது தொடர்பாக நடந்த மோதலில் 2மினி பஸ் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதை அறிந்து டென்சனான மினி பஸ் டிரைவர்கள் வண்டியூர், அண்ணா நகர் பகுதிகளில் பஸ்களை சாலைகளின்குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து 17 மினி பஸ் டிரைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வரத் தான் முடியவில்லை என்றால் பேசாமல் இருக்கலாம். அதை விட்டுவிட்டுமக்களை வதைக்கும் ஆட்டோக்காரர்கள் உதவியுடன் ஆர்.டி.ஓ. அதிகாரிகளைவிட்டு மினி பஸ்களுக்கு மூடு விழாநடத்த முயற்சிக்கும் அதிமுக அரசின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இதுவரை அதிக கட்டணம் கேட்ட ஆட்டோகாரர்கள் யாரையும் போலீசார் கைது செய்த வரலாறே இல்லை.ஆனால், மக்களுக்கு உதவியாக குறைந்த கட்டணத்தில் இயங்கும் மினி பஸ் டிரைவர்கள் மீது மட்டும் பாய்ச்சல்காட்டியிருக்கிறது போலீஸ்.

எங்க போகுது தமிழ்நாடு...

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+