இலங்கை வழியே சட்டவிரோதமாய் ஐரோப்பாவில் குடியேறும் இந்தியர்கள்
கொழும்பு:
ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக குடியேற பல இந்தியர்களும் இலங்கையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் பஞ்சாப், குஜராத் மற்றும் ஆந்திரமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். சமீபத்தில் இஸ்ரேலில் கூட ஆந்திராவைச் சேர்ந்த 16 மோசடியாக் குடியேறி அவர்களை அந்நாடு விரட்டி விட்டது.
இந் நிலையில் சமீபத்தில் இலங்கை வழியாக இத்தாலிக்கு சட்டவிரோதமாகப் போக முயன்ற 43 சீக்கியர்களை இலங்கை கைதுசெய்தது. அதில் 14 சீக்கியர்கள் கொழும்பு அருகே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இது போல பலர் பிடிபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலி மற்றும் கிரீஸ்நாடுகளுக்குச் செல்ல முயன்றவர்கள். இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளில் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை கொடுத்து கப்பல்கள்மூலமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
சமீபத்தில் பிடிபட்ட சீக்கியர்கள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இத்தாலியில் இருந்து அவர்களை அழைத்துசெல்ல வரும் கப்பலுக்காக காத்திருந்தனர். ஆனால், இவர்கள் கப்பலைப் பிடிக்கத் தவறிவிட்டனர்.
அதை அறிந்த ஹோட்டல் நிர்வாகம் இவர்களை இந்தியத் தூதரகம் அருகே கொண்டு வந்து விட்டுவிட்டனர். இதையடுத்து இதில்தலையிட்ட இந்திய அதிகாரிகள் அவர்களது ஆவணங்களை சோதனையிட்டபோது 4 பேருடைய பாஸ்போர்ட்டும் போலியானதுஎன்று தெரியவந்தது. மேலும் இலங்கைக்கு டூரிஸ்ட் விசாவில் அவர்கள் வந்திருப்பது தெரிந்தது.
சீ மேன், சைலரஸ் போன்ற கப்பல் ஊழியர்களைப் போலக் காட்டும் போலி ஆவணங்களையும் வைத்திருந்தனர். மேலும்பனாமா நாட்டு கப்பல் துறை கொடுத்தது போன்ற அடையாள அட்டைகளையும் போலியாகத் தயார் செய்து வைத்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் திரும்பி இந்தியாவுக்குச் செல்ல ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்தனர். இதைத் தொடர்ந்துஅவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். ஆனால், இதில் 14 பேரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் அவர்களை விடமறுத்துவிட்டது இலங்கை. கொழும்பில் சிறையில் அடைத்துவிட்டது.
இலங்கையில் இனப் பிரச்சனை வெடித்தது முதல் இது போன்ற ஏஜென்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்கள்உதவியுடனும் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய இந்தியர்கள் முயல்கின்றனர். இந்த ஏஜெண்டுகளுக்கும்இந்திய ஏஜெண்டுகளுக்கும் இடையே தொடர்பும் உள்ளது.
சமீபத்தில் பிடிபட்ட இந்தியர்கள் கொடுத்த தகவலை வைத்து டெல்லியில் உள்ள இரு ஏஜெண்டுகள் அடையாளம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து இந்தியாவுக்கு இலங்கை தகவல் தந்துள்ளது. டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார்விசாரணையும் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
இந்தியாவைப் போல இல்லாமல் இலங்கையில் பெரிய கப்பல்களும் கூட கரைப் பகுதிக்கு அருகில் வரும் என்பதால் இவற்றின்மூலம் ஆட்களைக் கடத்துவது எளிதாக இருந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications