கோவை அருகே காட்டு யானைகளால் கிராம மக்கள் அவதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் ஆணைக்கட்டி அருகே மலைப் பகுதியிலிருந்து வரும் யானைக் கூட்டத்தால் கிராமமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
ஆணைக்கட்டி மலைப் பகுதியில் அதிக அளவில் யானைகள் உள்ளன. மலைப் பகுதியில் கடும் நீர்ப் பற்றாக்குறைஏற்பட்டதைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள மாந்தரை என்ற கிராமத்திற்குள் தினசரி மாலையில் இந்தயானைகள் வரத் தொடங்கியுள்ளன.
அந்தக் கிராமத்திலுள்ள செங்கல் சூளைகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரைக் குடித்து காலி செய்து விடுகின்றன.
அத்தோடு நிற்காமல் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து அனைத்து வாழை மரங்களையும் நாசம் செய்கின்றன.கடலை, தட்டைப் பயறு மற்றும் சோளம் ஆகிய பயிர்களையும் மிதித்துத் துவம்சம் செய்து விடுகின்றன.
மாலையில் வரும் இந்த யானைக் கூட்டம் இரவு நெடுநேரம் கழித்தே மலைக்குச் செல்கின்றது. பட்டாசுகளைக்கொளுத்தி விரட்ட கிராம மக்கள் முயன்றாலும், யானைகளிடம் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல்அவதிப்படுகின்றனர்.
வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாந்தரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications