கருணாநிதி கைது புகழ் முத்துக்கருப்பனின் வழக்கு தள்ளுபடி
சென்னை:
மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்படுவதை எதிர்த்து மத்திய நிர்வாக டிரிப்யூனலில், முன்னாள் சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ், துணை கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர்தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து டிரிப்யூனல் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்றுஅதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
ஆனால் இதை எதிர்த்து மூன்று அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாகவியல்நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாத்த நீதிபதி சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.அதில்,
மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு கோரி மத்திய அரசு வெறும் கடிதம் மட்டுமே எழுதியுள்ளது. இறுதிஉத்தரவைப் பிறப்பிக்கவில்லை.
ஆனால் அதற்குள் முன் கூட்டியே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்குமுன்பே அதை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது.
எனவே மூன்று போலீஸ் அதிகாகளின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த மூன்று அதிகாரிகளில் ஜார்ஜ் இன்னும் அதே பதவியில் தான் உள்ளார். முத்துக்கருப்பன் பந்தாடப்பட்டுஇப்போது திருச்சி ஆயுதப் படைத் தலைவராக உள்ளார். அதிமுக மேலிடத்தில் செல்வாக்கோடு விளங்கிய முத்துக்கருப்பன் ஹோட்டல் சரவண பவன் அதிபரின் லீலைகள் விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கினார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு ஆயுதப் படையில் இருக்கிறார்.
-->
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications