போலாரிஸ் சாப்ட்வேர் நிறுவன தலைவர் இந்தோனேஷியாவில் கைது
சென்னை & டெல்லி:
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட போலாரிஸ் சாப்ட்வேர் லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் அருண் ஜெயின்இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேங்க் ஆர்த் கிரஹா என்ற வங்கிக்கும் போலாரிஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட வர்த்தக விவகாரம் தொடர்பாக ஜெயினும் அந்தநிறுவனத்தின் மூத்த அதிகாரியான ராஜிவ் மல்ஹோத்ராவும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த மூன்று நாட்களாகசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்தியாவுக்கான இந்தோனேஷியத் தூதரை டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் இன்று நேரில்அழைத்து விளக்கம் கேட்டனர். அருண் ஜெயினை உடனை விடுவிக்க வேண்டும் என அப்போது இந்தியா கோரிக்கை விடுத்தது.
தனது வங்கியின் செயல்பாட்டை கம்ப்யூட்டர்மயமாக்க போலாரிஸ் நிறுவனத்துடன் பேங்க் ஆர்த் கிரஹா ஒப்பந்தம் செய்தது.இதற்காக போலாரிஸ் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் டாலர் பணத்தை அந்த வங்கி வழங்கியது.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலையில் கையெழுத்தானது. இதையடுத்து அதற்கான சாப்ட்வேரை போலாரிஸ் நிறுவனம் எழுதஆரம்பித்தது. இந் நிலையில் திடீரென தங்களுக்கு அந்த சாப்ட்வேர் வேண்டாம் எனவும் பணத்தைத் திருப்பித் தருமாறும் அந்தவங்கி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இதற்காக ஏகப்பட்ட செலவு செய்துவிட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என போலாரிஸ் கூறிவிட்டது.
இதையடுத்து தனது நிறுவன அதிகாரிகளுடன் அருண் ஜெயின் இந்தோனேஷியா சென்றார். ஜகார்தாவில் உள்ள வங்கியின்அதிகாரிகளுடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க முயன்றார்.
ஆனால், வங்கிக்குள் அவர்கள் நுழைந்தவுடன் கதவை வெழியில் இருந்து பூட்டிய காவாலாளிகள் அவர்களை ஒரு அறையில்அடைத்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தனர். உடனே அவர்களை இந்தோனேஷிய போலீசார்கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.
இந்த விவகாரம் இந்திய சாப்ட்வேர் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தலையிட்டுள்ளார். அருண்ஜெயின் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறிய அவர், ஜெயினுக்கு இந்தியா முழு ஆதரவு தரும். அவரை உடனேவிடுவிக்குமாறு அந் நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
இந்தியாவின் கம்யூட்டர்துறையின் வர்த்தக சபையான நாஸ்காமும் இந்தோனேஷிய சாப்ட்வேர் வர்த்தக சபையானஅஸ்பிலுகியுடன் பேசி வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications