வைகோ கைதை எதிர்த்து "ஒரு கோடி கையெழுத்து": கருணாநிதி துவக்கினார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒரு கோடிகையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தை அக்கட்சி தொடங்கியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி முதல்கையெழுத்தைப் போட்டு அந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஜூலை 11ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ, வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ தவிர மேலும் ஒன்பது மதிமுகவினரும் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டது அநீதியானது என்பதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு கோடிகையெழுத்துக்களைப் பெறும் இயக்கம் ஒன்றை மதிமுக தொடங்கியது. இது தொடர்பாக மதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
மேலும் முதல் கையெழுத்தை கருணாநிதியிடம் வாங்கவும் மதிமுகவினர் முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை-கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன்தலைமையில் அக்கட்சியினர் சென்றனர்.
"ஒரு கோடி கையெழுத்து" இயக்கம் பற்றி கருணாநிதியிடம் கணேசன் விளக்கிக் கூறினார். பொடா சட்டத்தில்வைகோ கைது செய்யப்பட்டதை ஆரம்பத்திலேயே தான் கண்டித்ததை அப்போது நினைவுபடுத்தினார் கருணாநிதி.
பின்னர் மதிமுகவினர் கொண்டு சென்ற ஒரு படிவத்தில் முதல் முதலாக கருணாநிதி தன் கையெழுத்தைப் போட்டார்.
"பொடா சட்டத்தின் கீழ் மதிமுகவினரைச் சிறையில் அடைத்த தமிழக அரசின் நடவடிக்கை அநீதியானது. இதற்காகஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்தப் படிவத்தில் டைப்செய்யப்பட்டிருந்தது. அதன் கீழ் முதல் கையெழுத்தைப் போட்டார் கருணாநிதி.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications