இன்று அதிமுக பொதுக் குழுவில் முக்கிய முடிவுகள்: ஜெ. அறிவிக்கிறார்
சென்னை:
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று இரணடாவது நாளாக தொடர்ந்தது.
விஜயசேஷ மகாலில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது.
இன்று கூட்டம் தொடங்கியவுடன் பல நிர்வாகிகளும் தங்கள் பகுதியின் அரசு அதிகாரிகள் மீது புகார்களைத் தெரிவித்தனர்.நாங்கள் செய்யும் சிபாரிசுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை எனவும் இதனால் சம்பாதிக்க முடியவில்லை என்பதையும் பலர்வெளிப்படையாகவே கூறினர்.
நேற்று பேசிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா தேசிய அரசியலுக்குப் போக வேண்டும்என்றனர். மேலும் எதிர்வரும் தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுக தனித்தேபோட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையே தான் இன்றைய கூட்டத்திலும் பலரும் வலியுறுத்தினர்.
அச்சிரப்பாக்கம், ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை, வாணிம்பாடி ஆகிய சட்டசபை இடைத் தேர்தல்களில் அதிமுகதனித்து நின்றே அமோக வெற்றி பெற்றது. எனவே எந்தக் கட்சியின் கூட்டணியும், ஆதரவும் நமக்குத்தேவையில்லை என்று நிர்வாகிகள் கூறினர்.
அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேருவதால் நமக்கு ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக அந்தக்கட்சிகள்தான் பலனடைகின்றன, ஆனால் ஜெயித்த பிறகு அணி மாறி நம்பிக்கைத் துரோகம் செய்து விடுகின்றனஎன்றும் அவர்கள் கூறினர். இதை ஜெயலலிதா கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.
எனவே, வரும் சாத்தான்குளம் இடைத் தேர்தலிலும் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோஷத்தைஇன்றும் நிர்வாகிகள் முன் வைத்துப் பேசினர்.
இது தவிர அதிமுக அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவும் வகையில் ஜெயலலிதா ஏதாவது செய்ய வேண்டும்என்றும் ஒரு சிலர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், வாரியத் தலைவர் என ஒரு பதவியும் கிடைக்காத பலருக்கு உதவும் வகையில்அம்மா ஏதாவது செய்தால் நல்லது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கட்சி வேறுபாடில்லாமல் செயல்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாரை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் என்றவேடிக்கையான கோரிக்கையையும் சிலர் வெளிப்படையாகவே முன் வைத்தனர். அப்படிச் செய்தால்தான்அதிமுகவினர் கொஞ்சமாவது சம்பாதிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் முழு வீச்சில் அரசு நிர்வாகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இன்று மாலை முடிவடையும் இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கிய முடிவுகளைஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications