காவிரி நடுவர் மன்ற உறுப்பினராக நீதிபதி நியமனம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தின் உறுப்பினராக நீதிபதி சுதிர் நாராயண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பட்நாயக் நேற்றிரவு இதனை அறிவித்தார். உறுப்பினராக இருந்த நீதிபதி எஸ்.டி. அகர்வால் சமீபத்தில்இறந்ததையடுத்து காலியாக இருந்த இடத்தை நிரப்ப இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்க இருந்தது. ஆனால் நீதிபதி அகர்வால்மரணமடைந்ததைத் தொடர்ந்து நடுவர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவம் வரை நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புவெளியாவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு முன்பு ஒரு முறை நடுவர் மன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்த போது, புதிய உறுப்பினரை நியமிப்பதற்கு ஆறு மாத காலம்ஆகியது. ஆனால் தற்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய உறுப்பினராக நீதிபதி சுதிர் நாராயண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து விரைவில் நடுவர் மன்றம் தன் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அகர்வாலும் (சமீபத்தில் இறந்தவர்) மற்றொரு உறுப்பினரான நீதிபதி என்.எஸ்.ராவும் சேர்ந்து தான் கடந்த ஜூன் 1991ல் காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட வேண்டும் என்பது குறித்துபரிந்துரைத்தனர்.
அதன்படியே தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நடுவர் மன்றத்தின் தலைவரான நீதிபதிஎன்.பி. சிங் உத்தரவிட்டார். இதைத்தான் ஒழுங்காகத் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்த நடுவர் மன்றத்தால் அமைக்கப்பட்டதுதான் காவிரி நதி நீர் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications