நாகப்பா சாவால் பாதிக்கப்பட்ட திருப்பூர் ரெடிமேட் தொழில்
கோவை:
நாகப்பா படுகொலை சம்பவத்தையடுத்து தமிழக வாகனங்கள் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படாததால்,திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சராசரியாக திருப்பூருக்கு ஒரு நாளைக்கு ரூ. 1கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திருப்பூரில் இருந்து ஜீன்ஸ், டி-சர்ட், காட்டன் சர்ட்கள் ஆயிரக்கணக்கில் நாட்டின் பல பகுதிகளுக்கும்அனுப்பப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு ஏற்றுமதி மும்பை மற்றும் பெங்களூர் நிறுவனங்கள் மூலமாகத் தான் பெருமளவில் நடக்கிறது.
தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் திருப்பூரில் இருந்து மும்பை, பெங்களூர் மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கும்செல்கின்றன. இவை கர்நாடகத்தைக் கடந்து தான் சென்றாக வேண்டும்.
நாகப்பா படுகொலைச் சம்பவத்தையடுத்து தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் எதுவும் தமிழக எல்லையைத்தாண்டி கர்நாடக எல்லைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக பெங்களூர் நிகருக்குள் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் நுழைய முடியவில்லை.
இதையடுத்து திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்களில் பல கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்தன.உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்ற முடியாததாலும் ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்யமுடியாததாலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் திருப்பூர் ஆலைகளிலேயே தேங்கிக்கிடக்கின்றன.
சராசரியாக கடந்த 2 வாரங்களில் திருப்பூருக்கு சராசரியாக தினசரி ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்கணக்கிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தமிழக வாகனங்களுக்கு கன்னடவெறியர்கள் தாக்க ஆரம்பித்து விடுவதால், தமிழக வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த அவல நிலையை ஒழிக்க இரு மாநில அரசுகளும் உடனடியாக ஏதாவது மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications