வைகோ கைதை கண்டித்து நாடாளுமன்றத்தில் மதிமுக, மார்க்சிஸ்ட் போர்க்கொடி
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்துநாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பியான சி. கிருஷ்ணன் புகார் கூறினார்.
நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பின் வைகோ கைது விவகாரத்தை எழுப்பினார் கிருஷ்ணன். அவர்பேசுகையில்,
வைகோ கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு 156 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்படவில்லை.
நேர்மையான, நியாயமான எங்கள் தலைவரை எந்தவிதமான அடிப்படைக் காரணமும் இல்லாமல் தமிழக அரசுபொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனுடைய கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் வரவேற்றனர். அக்கட்சியின் தலைவர்சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில்,
வைகோவின் அரசியல் கொள்கைகளுடன் எங்கள் கட்சிக்கு வேறுபாடு உள்ளது என்றாலும், அவரை தமிழக அரசுநடத்தும் விதத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
வைகோ மீதான வழக்கு உருப்படியாக நடக்கவில்லை. அவரை ஜாமீனிலும் விடவில்லை.
மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்றார் சாட்டர்ஜி.
உரிய துறையின் கவனத்திற்கு எம்.பிக்களின் கருத்துக்களைக் கொண்டு செல்வேன் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த்குமார் உறுதியளித்தார்.
-->
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications